கூட்டுறவு பயிர்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக்கோரி விவசாயிகள் சங்கத்தினர் தொடர் முழக்க போராட்டம்

Priya
29 Views
1 Min Read

தேர்​தல் வாக்​குறு​திப்​படி, விவ​சா​யிகள் பெற்​றுள்ள கூட்​டுறவு பயிர்க் கடனை முழு​மை​யாக தள்​ளு​படி செய்ய வலி​யுறுத்​தி, தமிழ்​நாடு விவ​சா​யிகள் சங்​கங்​களின் மாநிலக்​குழு சார்​பில், சென்னை கீழ்ப்​பாக்​கம் மாநில கூட்​டுறவு சங்​கங்​களின் பதி​வாளர் அலு​வல​கம் முன்பு தொடர் முழக்க போராட்​டம் நேற்று நடை​பெற்​றது.

போராட்​டத்​தில், தமிழ்​நாடு விவ​சா​யிகள் சங்​கத்​தின் (சிபிஐ) பொதுச்​செய​லா​ளர் பி.எஸ்​.​மாசிலாமணி, தமிழ்​நாடு விவ​சா​யிகள் சங்​கத்​தின் (சிபிஎம்) மாநில பொதுச்​செய​லா​ளர் சாமி.நட​ராஜன் உட்பட 300-க்​கும் மேற்​பட்​டோர் பங்கேற்றனர்.

இதுகுறித்து, தமிழ்​நாடு விவ​சா​யிகள் சங்​கங்​களின் மாநிலக் குழு நிர்​வாகி​கள் கூறிய​தாவது: தமிழகம் முழு​வதும் தொடக்க வேளாண்மை கூட்​டுறவு வங்​கி​களில் விவ​சா​யிகள் பெற்​றுள்ள பயிர்க் கடன் ரூ.2,044.46 கோடிதள்​ளு​படி செய்​யப்​படு​வ​தாக வெளி​யான அரசின் முதல்​கட்ட அறி​விப்​பில், ஒரு பகுதி விவ​சா​யிகள் மட்​டும் பலன் பெறு​வர்.

பெரும்​பகுதி விவ​சா​யிகளுக்கு தேர்​தல் வாக்​குறு​திப்​படி கடன் தள்ளுபடி அறி​விப்பை அரசு வெளி​யிட வேண்​டும் என வலி​யுறுத்​தி, மே 26-ல் எங்​கள் சங்​கங்​களின் சார்​பில் கவன ஈர்ப்பு ஆர்ப்​பாட்​டம் நடத்​தினோம்.

ஜூன் 2-ல் தமிழக முதல்​வரை நேரில் சந்​தித்​து, கடன் தள்​ளு​படி செய்ய மறு​பரிசீலனை செய்ய வேண்​டும் என வலி​யுறுத்​தினோம். அதனடிப்​படை​யில், ஜூன் 16-ம் தேதி மாநில அரசு புதிய அறி​விப்பு வெளி​யிட்​டது.

அதில் ரூ.75 ஆயிரம் வரை பயிர்க் கடன் பெற்​றுள்​ளவர்​களுக்கு முழுத் தள்​ளு​படி​யும், அதற்கு மேல் கடன் பெற்​றுள்ள விவ​சா​யிகளுக்கு ரூ.35 ஆயிரம் தள்​ளு​படி​யும் அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. இது ஏற்​கனவே அறிவிக்​கப்​பட்​டதை விட ஒரு சிறிய முன்​னேற்​றமே தவிர, முழு​மை​யான தள்​ளு​படி​யாக அமைய​வில்​லை.

எனவே, தேர்​தல் வாக்​குறு​திப்​படி 5 ஏக்​கர் வரை பயிர்க்கடன் பெற்ற விவ​சா​யிகளின் கடனை முழு​மை​யாக​வும், 5 ஏக்​கருக்கு மேல் பயிர்க் கடன் பெற்ற விவ​சா​யிகளின் கடனில் 50 சதவீத​மும் தள்​ளு​படி செய்ய வேண்​டும். இவ்​வாறு அவர்​கள் கூறினர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply