ஆளுநர் உரையானது தவெக செய்தி தொடர்பாளரின் பேச்சு போல் இருந்தது – பிரேமலதா விஜயகாந்த் விமர்சனம்

Priya
55 Views
1 Min Read

ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் மீதான தீரமானம் மீதான விவாதத்தின் போது பேசிய விருத்தாச்சலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் தேமுதிக பொதுச் செயலாளருமான பிரேமலதா விஜயகாந்த் , ஆளுநரின் உரையானது தவெக செய்தித் தொடர்பாளரின் பேச்சு போல் இருந்தது என்று விமர்சித்தார் .

ஆளுநரின் 37 நிமிட உரை முழுவதும் ஆளும் தவெக அரசுக்கு ஆதரவாக மட்டுமே எழுதப்பட்டிருந்தது. 37 நிமிட உரையில் தமிழ் உச்சரிப்பில் 37 தவறுகள் இருந்தன என்று குறிப்பிட்டார். தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும், கும்மிடிப்பூண்டியில் 3 வயது குழந்தை சீரழிக்கப்பட்டது உள்ளிட்ட முக்கியப் பிரச்சினைகளுக்கு இந்த ஆளுநர் உரையில் எந்த ஒரு தீர்வும் இல்லை என்றும் பேசினார்.

தொடர்ந்து பேசிய பிரேமலதா விஜயகாந்த் விருத்தாச்சலத்தை தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டம் உருவாக்க வேண்டும் என்ற நீண்ட காலக் கோரிக்கையை, இன்றைய தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில் வலியுறுத்தினார்.

விருத்தாசலத்தில் கூட்டுக் குடிநீர் திட்டத்தை தமிழ்நாடு அரசு கொண்டுவர வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், காவிரி, முல்லைப்பெரியாறு அணை பிரச்சனையில் நட்பு ரீதியாக பேசியும் தீர்வு காணலாம் என்று யோசனையை முன்வைத்தார். புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா முதல்வர்கள் நட்புரீதியாக பேசி நீர் சார்ந்த பிரச்னைகளில் தீர்வு காணலாம் என்று குறிப்பிட்டார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply