பெட்ரோல், டீசல் மற்றும் சிலிண்டர் விலை உயர்வை குறைக்கக்கோரியும் அவற்றை திரும்ப பெறக்கோரியும் எர்ணாவூர் பாரத் நகரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், பொது தொழிலாளர் சங்கம் கே.ஆர்.முத்துசாமி உமாகாந்தன், ஓய்வு பெற்றோர் நலச்சங்கம் மாநில துணை பொதுச் செயலாளர், மாணவர் சங்கம் மாவட்ட செயலாளர் அகல்யா மற்றும் உறுப்பினர்கள் ராஜ்குமார்.
கேகே புஷ்பா வெங்கட், ஐயா சுரேஷ், நாகராஜ், தேவிபாலா, தனலட்சுமி ஆகியோர் உள்பட பலர் கலந்துகொண்டு ஒன்றிய பாஜ அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். அப்போது அவர்கள், ‘’ சிலிண்டர் விலை உயர்வை குறைக்கவேண்டும்’ என்று வலியுறுத்தினர்.

