சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஒருசில பகுதிகளில் மிதமான மழை வாய்ப்பு இருப்பதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு, சேலம், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய கிழக்கு வங்கக்கடல் முதல் தென்கிழக்கு அரபிக் கடல் வரையிலும், தென்மேற்கு வங்கக்கடல், தென் தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளின் வழியாகவும் ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, சேலம், தேனி, திண்டுக்கல் மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

