ஏசி பயன்படுத்தும்போது சீலிங் ஃபேன் போடலாமா? என்பது குறித்து இத்தொகுப்பில் பார்க்கலாம்.
தற்போது வெயில் காலம் ஆரம்பித்துவிட்டது. எனவே, இந்நேரத்தில் ஏசி யின் பயன்பாடு அதிகமாகவே இருக்கும். ஏசி ஓடும் போது சீலிங் ஃபேன் போடலாமா? என்பது தான் பெரும்பாலானோரின் கேள்வி.. இதற்கான பதில் இதோ…
ஏசியை பயன்படுத்தும்போது சீலிங் ஃபேன் ஆன் செய்யக் கூடாது என்று சிலர் சொல்வார்கள். ஏனெனில், அது அனல் காற்றை கீழேதள்ளும். ஆனால், ஏசியுடன் சீலிங் ஃபேனை பயன்படுத்தும்போது அது அறையில் இருக்கும் காற்றையே தள்ளும் தெரியுமா
இதனால் அறை முழுவதும் குளிர்ச்சியாகிறது. மேலும் சீலிங் ஃபேன் அறையின் ஒவ்வொரு மூலையிலும் குளிர்ந்த காற்றை அனுப்புகிறது. அச்சமயத்தில், ஏசி அதிகம் வேலை செய்ய வேண்டிய அவசியமில்லை.
அதேசமயத்தில், அறையில் இருக்கும் ஜன்னல்கள், கதவுகள் மூடியிருக்க வேண்டும். இதனால் அறையில் இருக்கும் குளிர்ந்த காற்று வெளியேறாமல் இருக்கும். உண்மையில், ஏசியுடன் சீலிங் ஃபேனை பயன்படுத்தும் போது மின்சாரத்தை சுலபமாக சேமிக்கலாம்.
மேலும் ஏசியின் வெப்பநிலை 24 முதல் 26 வரையும், ஃபேனை குறைந்தபட்ச வேகத்தில் வைத்திருக்க வேண்டும். இப்படி செய்தால் அறை முழுவதும் விரைவில் குளிர்ச்சியடையும்.
அதே சமயத்தில், ஃபேனானது அறை முழுவதும் காற்றை பரப்புவதால், அறை விரைவாக குளிர்ந்துவிடும். இதனால் செலவும் குறையும். எப்படியெனில், நாம் ஏசியை 6 மணி நேரம் ஏசி பயன்படுத்தும் போது 12 யூனிட் செலவாகிறது. அதே சமயத்தில், ஏசியுடன் ஃபேனை பயன்படுத்தினால் 6 யூனிட் மட்டுமே செலவாகும். இதன் மூலம் மின்சார செலவும் மிச்சமாகும்.