கடவுளிடமும் கொள்ளையடிக்கிறது புதுச்சேரி அரசு: ராகுல் காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு

Priya
11 Views
1 Min Read

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று (ஏப்ரல் 6, 2026) புதுச்சேரியில் பிரமாண்ட பிரச்சாரத்தை மேற்கொண்டார். தற்போதைய என்.ஆர். காங்கிரஸ் – பாஜக கூட்டணி அரசை “வசூல் ஏஜெண்ட்” எனச் சாடிய அவர், பல்வேறு அதிரடி குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

ராகுல் காந்தியின் முக்கியக் குற்றச்சாட்டுகள்:

  • ரிமோட் கண்ட்ரோல் ஆட்சி: “புதுச்சேரி மக்களால் ஆளப்படவில்லை; டெல்லியில் இருந்து துணைநிலை ஆளுநர் மூலம் ரிமோட் கண்ட்ரோல் செய்யப்படுகிறது. பாஜக உள்ளூர் தலைவர்களை ஓரம் கட்டிவிட்டது.”
  • அதானிக்கு விற்பனை: “காரைக்கால் துறைமுகம் ஏற்கனவே அதானிக்கு விற்கப்பட்டுவிட்டது. அடுத்து புதுச்சேரி மின்வாரியத்தையும் அதானிக்கு விற்கப் பார்க்கிறார்கள்.”
  • கோயில் நில அபகரிப்பு: “புதுச்சேரி அரசு ஒவ்வொரு ஒப்பந்தத்திற்கும் 30% கமிஷன் வாங்குகிறது. கோயில் நிலங்களை அபகரித்து, கடவுளிடமே கொள்ளையடிக்கிறார்கள்.”
  • சட்டம் – ஒழுங்கு: “பெண்களும் குழந்தைகளும் இரவில் நடக்க அஞ்சும் சூழல் நிலவுகிறது. போலி மருந்துகள் தயாரிக்கப்பட்டும் நடவடிக்கை இல்லை.”

காங்கிரஸ் – திமுக கூட்டணியின் தேர்தல் வாக்குறுதிகள் (Rahul Gandhi Puducherry Campaign 2026):

ஆட்சிக்கு வந்தால் செயல்படுத்தப்படவுள்ள திட்டங்களாக ராகுல் காந்தி அறிவித்தவை:

  1. நிதியுதவி: வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதம் ரூ.2,000 உதவித்தொகை.
  2. வேலைவாய்ப்பு: பொது மற்றும் தனியார் துறைகளில் 30,000 புதிய வேலைவாய்ப்புகள்.
  3. மகளிர் நலம்: பெண்களுக்குப் பேருந்துகளில் கட்டணமில்லாப் பயணம்.
  4. மருத்துவக் காப்பீடு: இருதய பாதிப்பு, புற்றுநோய் உள்ளிட்ட சிகிச்சைகளுக்கு ரூ.20 லட்சம் வரை காப்பீடு.
  5. நிர்வாக மாற்றம்: 6 மாதத்திற்குள் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் மற்றும் அரசு வேலைக்கான வயது வரம்பு 40-ஆக உயர்த்தப்படும்.
Share This Article
Leave a Comment

Leave a Reply