அமெரிக்காவிலிருந்து வீடு திரும்பும் திட்டங்களை இரத்து செய்து வரும் இந்திய மாணவர்கள்.
அமெரிக்காவின் கடுமையான விசா விதிகள் காரணமாக அங்குள்ள இந்திய மாணவர்கள், விடுமுறை காலங்களில் வீடு திரும்பும் திட்டங்களை இரத்து செய்து வருகின்றனர்.
அமெரிக்க அரசு மாணவர் பயணத்திற்கு தடைவிதிக்கவில்லை என்றாலும், சில முன்னணி பல்கலைக்கழகங்கள் விடுமுறை காலங்களில் அமெரிக்காவிலேயே இருக்குமாறு மாணவர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளன.
கூடுதலாக அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடும் மாணவர்கள் மீது அதிகமான கண்காணிப்பு உள்ளதால், அரசியல் செயற்பாடுகளை மாணவர்கள் தவிர்க்கும் வலியுறித்தப்பட்டுள்ளது. இதனால், பல மாணவர்கள் தாய் நாடு திரும்பும் பயணத்தை இரத்து செய்து அமெரிக்காவிலேயே தங்க முடிவு செய்துள்ளனர்.
இப்படியான அச்சத்திற்கு முக்கிய காரணம் கடந்த ஆண்டில்(2024) மட்டும் ஏறக்குறைய 41 சதவீத F-1 விசா விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது தான்.