ரஜினி,கமல்,விஜய் என ஒவ்வொரு ஸ்டார்கள் நடிக்கும் படங்களின் அப்டேட்டுகளும் வரிசையாக வருகிறது ஆனால் ’தல’ நடிக்கும் படத்தின் அப்டேட் மட்டும் வரவில்லையே என எதிர்பார்த்துக் காத்துக்கிடக்கும் அஜித் ரசிகர்களுக்காக ஒரு சூப்பரான அப்டேட்டை வெளியிட்டுள்ளது லைக்கா நிறுவனம்.
புத்தாண்டு தினம் பிறந்ததில் கூட சிலருக்கு மகிழ்ச்சி இருந்திருக்குமோ இல்லையோ தெரியாது ஆனால் அஜித் நடித்த விடாமுயற்சியின் அப்டேட் வந்துள்ளது தான் பலருக்கும் ஹாப்பி.
லைக்கா நிறுவனம் கொடுத்துள்ள அந்த சர்ப்ரைஸ் என்னங்கனு நீங்க கேட்குறது புரியது.
தங்களது தயாரிப்பில் 2024ல் வெளி வரவிருக்கும் படங்கள் அனைத்தையும் குறிப்பிட்டு புத்தாண்டு வாழ்த்தை லைக்கா நிறுவனம் தெரிவித்துள்ளது. இதை தொடர்ந்து பரவலாக பேசப்பட்டு வரும் விடாமுயற்சி படத்தின் சுவாரஸ்யமான தகவலும் வெளிவந்துள்ளது.
அதன்படி, விடாமுயற்சி படத்தின் ஆடியோ உரிமையை சோனி மியூசிக், சாட்டிலைட் உரிமையை சன் டிவி மற்றும் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனங்கள் கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த செய்தியை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.