தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமான நடிகர் விஜய் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழக வெற்றி கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கினார். வரும் 2026 பொதுத் தேர்தலில் விஜய்யின் த.வெ.க கட்சி போட்டியிடும் என்று கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிவித்த நிலையில், அவர் டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்தில் கட்சியை பதிவு செய்தார்.
தனது அரசியல் பயணத்தை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார் த.வெ.க கட்சித் தலைவர் விஜய். அதேநேரம் பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் கடந்த 23ம் தேதி தமிழ்நாடு வெற்றி கழக கொடி ஏற்றப்பட்டது.
மேலும், தமிழ்நாடு வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் ,செப்டம்பர் 22ம் தேதி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது.இந்நிலையில், விக்கரவாண்டியில் நடைபெற உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டிற்கு அனுமதி கோரி ஏ.டி.எஸ்.பி திருமாலிடம் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மனு அளித்துள்ளார்.