இன்றைய டிஜிட்டல் உலகில் யார் வேண்டுமானாலும் யூடியூபில் கணக்கு துவங்கி வீடியோக்கள் பதிவிடலாம். சாதாரனமானவர்கள் தொடங்கி பிரபலமானவர்கள் வரை அனைவருமே யூடியூபில் கணக்கு துவங்கி வீடியோக்கள் பதிவிடுகின்றனர். அவர்களின் வீடியோக்கள் பிடித்திருந்தால் அந்த பக்கத்தினை சந்தாதாரர்கள் என அழைக்கப்படுகின்ற சப்ஸ்கிரைபர்கள் பின் தொடருகின்றனர். 

இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களும் தனக்கென ஒரு யூடியூப் பக்கத்தினை வைத்திருக்கிறார். அந்த யூடியூப் பக்கம் தற்போது 20 மில்லியன் அதாவது 2 கோடி சப்ஸ்கிரைபர்களைக் கடந்துள்ளது. இதன்மூலம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உலகத்தலைவர்கள் வரிசையில் முதல் இடத்தைப் பெற்றுள்ளார். 

modi 2 கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பிரதமர் மோடியின் யூ-டியூப் பக்கம் 1 கோடி சந்தாதாரர்களை பெற்றிருந்த நிலையில் தற்போது  2 கோடி சப்ஸ்கிரைபர்களைப் பெற்றுள்ளது. மேலும், பிரதமர் மோடியின் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோக்கள் 4.50 பில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது. இவற்றில் 3 முக்கிய வீடியோக்கள் மட்டுமே மொத்தமாக 175 மில்லியன் பார்வைகளை பெற்றுள்ளது.

பிரதமர் மோடியுடன் ஒப்பிடும்போது, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், யூ-டியூப் பக்கத்துக்கு 7,94,000 சப்ஸ்கிரைபர்களே உள்ளனர்.

modi 1

நரேந்திர மோடி 20 மில்லியன் சப்ஸ்கிரைபர்களை அடைந்தது அவரின் தனிப்பட்ட சாதனை மட்டுமல்லாமல்,  அரசியல் தகவல் தொடர்பு வளர்ச்சிக்கு  சான்றாகவும் விளங்குகிறது.. பிரதமருக்கு அடுத்தபடியாக பிரேசில் அதிபர் 2ஆவது இடத்திலும், உக்ரைன் அதிபர் 3ஆவது இடத்திலும் உள்ளனர். உலக வல்லரசான அமெரிக்க அதிபர் ஜோ பைடன் 4 ஆவது இடத்தில் உள்ளார். கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் யூ-டியூப் சேனல் 10ஆவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here