திருப்பாச்சி, சிவகாசி, திருத்தணி, திருப்பதி, பழனி உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கியுள்ள இயக்குநர் பேரரசு இன்று தஞ்சாவூரில் நடைபெற்ற கோயில் குடமுழுக்கு விழாவில் கலந்து கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய இவர் “சினிமாதுறையில் கூறப்படும் பாலியல் குற்றங்கள் உண்மையாக இருக்கும் பட்சத்தில் நிச்சயம் கண்டிக்க வேண்டும். தவறு செய்திருப்பது உறுதி செய்யப்பட்டால் கண்டனம் தெரிவிப்பதோடு விடாமல் திரைத்துறையில் இருந்து ஒதுக்கி வைக்க வேண்டும்.
நடிகைகளுக்கு மட்டும் இல்லை தமிழ்நாட்டில் உள்ள எந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை ஏற்பட்டாலும் நடிகர் – நடிகைகள் குரல் கொடுக்க வேண்டும்.”
என இயக்குநர் பேரரசு தெரிவித்தார்.