கோவை: பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, கோவை விமானநிலையத்தில் செய்தியாளர் களிடம் நேற்று கூறியதாவது:

1210254

2013-ல் ஜாபர் சாதிக் உள்ளிட்ட 4 பேர், 20 கிலோ போதைப் பொருள் கடத்தலுக்காக கைது செய்யப்பட்டனர். 11 ஆண்டுகள் கழித்து, தற்போது 3,500 கிலோ போதைப் பொருளைக் கையாள்கிறார். அவரை தமிழக அரசும், காவல் துறையும் கண்காணிக்க தவறியது ஏன்?

பாஜக சார்பில் வரும் 7, 8-ம்தேதிகளில் தென்காசியில் போதைப் பொருட்களுக்கு எதிரான நிகழ்ச்சி நடத்த உள்ளோம். மக்களவைத் தேர்தலில் எனக்கு 39 தொகுதிகளிலும் பணி உள்ளது. தேர்தலில் நான் போட்டியிடுவேன் என்று சொல்லவே இல்லை. பிரதமர் மோடி என்ன சொன்னாலும், அதற்குக் கட்டுப்படுவேன். இவ்வாறு அண்ணாமலை கூறினார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here