ஆதார் தான் நமக்கு ஆதாரம் என நாடு முழுவதும் பல இடங்களில் சொல்லிட்டு வர நிலையில் , பேங்க் , பான் கார்டு, டிரைவிங் லைசென்ஸ் போன்ற பல அரசு சேவைகளுக்கு இந்த ஆதார் கார்டு நமக்கு கட்டாயம் தேவைப்படுகிறது.
இந்த அதர் கார்டு 10 வருஷத்துக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும் என ஆதார் ஆணையம் நமக்கு பரிந்துரை செய்கிறது. மேலும் இது தொடர்பான ஒரு அறிவிப்பை சமீபத்தில் வெளியிடப்பட்டது.
செப்டம்பர் 14 வரை மட்டுமே ஆதார் அப்டேட் செய்ய முடியும் என தகவல் பரவியுள்ள நிலையில் மக்கள் இ-சேவை மையங்களுக்கும், ஆதார் மையங்களுக்கும் படையெடுத்து வருகின்றனர்.
இதுவரைக்கும் இல்லாத அளவில் கடந்த 10 நாட்களில் மட்டும் 50,000க்கும் மேற்பட்டோர் ஆதார் அட்டையை புதுப்பித்துள்ளனர். ஆனால் இந்த தகவல் உண்மையல்ல, வதந்தி என்று தற்போது தெரியவந்துள்ளது. அதற்கான உரிய விளக்கத்தை ஆதார் ஆணைய அதிகாரிகள் அளித்துள்ளனர். .
“ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் ஒவ்வொரு 10 வருடங்களுக்கும் தங்கள் ஆதார் அட்டையை புதுப்பிக்க வேண்டும்.
கார்டு புதுப்பிக்க படாவிட்டாலும், செயலில் இருக்கும் அதன் சேவைகள் பாதிக்கப்படாது. 14ம் தேதிக்குள் புதுப்பிக்க வேண்டும் என சிலர் தவறான வதந்தியை பரப்பி வருகின்றனர். இதை மக்கள் நம்ப வேண்டாம். முகவரி சான்று ஆவணங்களை ஆதார் இணையதளத்தில் நேரடியாக பதிவேற்றம் செய்ய கட்டணம் ஏதும் இல்லை. முகவரி மாற்றத்தை இலவசமாக பதிவு செய்யலாம்.
இந்த சேவையை செப்டம்பர் 14ம் தேதி வரை நீட்டிக்க ரூ.50 கட்டணம் வசூலிக்கப்படும். இதை பலர் தவறாக புரிந்து கொண்டு வரும் 14ம் தேதிக்குள் ஆதாரை புதுப்பிக்க வேண்டும் இல்லையெனில் ரத்து செய்யப்படும் என தவறான தகவல்கள் மற்றும் முற்றிலும் தவறான செய்தி.
ஆதார் அட்டையை 10 ஆண்டுகளுக்குப் பிறகு எப்போது வேண்டுமானாலும் புதுப்பிக்கலாம். இதற்கு காலக்கெடு எதுவும் இல்லை.
என ஆதார் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.