அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ள நிலையில் எய்ம்ஸ் மருத்துவமனை இதுதான் என்று ஒரு செங்கலை காட்டி தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார். ஏற்கனவே கடந்த 2021ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தல் பிரச்சாரத்திலும் அதேபோல் அவர் செங்கலை காண்பித்து தேர்தல் பிரச்சாரம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

download 6

இந்த நிலையில் உதயநிதியின் செங்கல் பிரச்சாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி செங்கலை இங்கே காட்டி என்ன பயன்? நாடாளுமன்றத்தில் போய் காட்ட வேண்டும் என்று காட்டமாக விமர்சனம் செய்துள்ளார்.

மேலும் ,தமிழகத்திற்கு எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டு வர வேண்டும் என்று உண்மையிலேயே நீங்கள் அக்கறை கொண்டிருந்தால் இது பற்றி உங்கள் எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் பேசி இருப்பார்கள், ஆனால் அங்கே பேசாமல் இங்கே செங்கலை காட்டி என்ன பயன் நாடாளுமன்றத்தில் செங்கலை எடுத்துச் சென்று கொண்டு காட்டுங்கள் என்று அவர் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here