சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இன்று காலை முதலே மிதமான மழை பெய்து வருகிறது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி,
சென்னை,திருவள்ளூர் ,காஞ்சிபுரம்,செங்கல்பட்டு,விழுப்புரம் ,கடலூர்,ராணிப்பேட்டை,மயிலாடுதுறை ,நாகப்பட்டினம் ,திருவாரூர்,தஞ்சாவூர்,புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
வேலூர்,திருவண்ணாமலை,கள்ளக்குறிச்சி,திருப்பத்தூர்,தருமபுரி,திருச்சி,சிவகங்கை,ராமநாதபுரம்,திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம் என தெரிவித்துள்ளது.
இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி,
தென்மேற்கு பருவமழை வரும் அக்டோபர் 16 -18 தேதிகளில் இந்திய பகுதிகளில் இருந்து விலகுவதற்கான சாத்திய கூறுகள் உள்ளன.அதே சமயம் வளிமண்டல கீழடுக்குகளில் கிழக்கு /வடகிழக்கு திசை காற்று வீசக்கூடிய நிலையில் தமிழகம்,புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வடகிழக்கு பருவமழை 16-18 அக்டோபர் 2025 துவங்குவதற்கான சாத்தியமுள்ளது என தெரிவித்துள்ளது.