விஜய், மோகன், பிரசாந்த், சினேகா, பிரபுதேவா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பலர் நடித்துள்ள கோட் (Greatest of all time) திரைப்படம் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகிறது.
தமிழ்நாட்டில் கோட் படத்தின் முதல் நாள் காட்சி எப்போது என கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ள நிலையில், தமிழ்நாடு அரசு சிறப்பு காட்சி காலை 9 மணிக்கு திரையிட அனுமதி வழங்குமா என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
இந்நிலையில் கோட் படத்தின் முன்பதிவு தமிழ்நாட்டில் வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதி துவங்கும் என தெரியவந்துள்ளது. கோட் படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 57 நிமிடங்களாக இருந்த நிலையில், தற்போது மீண்டும் தணிக்கை செய்யப்பட்டு BTS காட்சிகளுடன் 3 மணி நேரம் 3 நிமிடங்களாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்தியாவில் கோட் படத்தின் முதல் காட்சி கேரளாவில் திரையிடப்படுகிறது. கேரளாவில் கோட் FDFS (FIRST DAY FIRST SHOW) அதிகாலை 4 மணி காட்சி திரையிடப்படுவது உறுதியாகியுள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் பலர் கேரளா சென்று கோட் முதல் காட்சி பார்த்து அலப்பறை செய்ய தயாராகி வருகின்றனர்.