வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை முதல் பாகத்தில் நடிகர் சூரி மற்றும் விஜய் சேதுபதி ஆகிய இருவரும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக வெற்றிப்படமாகவே அமைந்தது.
தற்பொழுது, வெற்றிமாறன் இரண்டாம் பாகத்திற்காக எடுத்துள்ள காட்சிகளின் நீளம் 4 மணி நேரம் இருப்பதாகவும், தற்போது எடுத்து வரும் காட்சிகள் அனைத்தையும் இணைத்து எவ்வளவு கிரிப்பாக படத்தொகுப்பு செய்தாலும் 4 மணி நேரத்திற்கு குறைய வாய்ப்பில்லை என்றும் சொல்லப்படுகிறது.
இதனால் விடுதலை 2ம் பாகத்தை இரண்டரை மணி நேரம் விதமாக தியேட்டரில் ரிலீஸ் செய்துவிட்டு அதன் பின்னர் மீதி படத்தை சில நாட்கள் கழித்து ஓடிடியில் ரிலீஸ் செய்ய இயக்குனர் வெற்றிமாறன் திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், நடிகர் எஸ்.ஜே.சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளதாகவும், உலகம் முழுவதும் இப்படம் டிச. 20-ம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.