2018-ம் ஆண்டு அனைத்து பணிகளும் முடிந்து வெளியீட்டுக்கு தயாரான படம் ‘பார்ட்டி’.
டி.சிவா தயாரித்த இந்தப் படத்தை வெங்கட்பிரபு இயக்கியிருந்தார். முழுக்க பிஜி தீவில் படமாக்கப்பட்ட இதில் சத்யராஜ், ஜெய், ஷாம், ஜெயராம், நாசர், ரம்யா கிருஷ்ணன், நிவேதா பெத்துராஜ், ரெஜினா, சஞ்சிதா ஷெட்டி என பெரிய பட்டாளமே நடித்திருந்தது.
பிஜியில் இருந்து வரவேண்டிய சான்றிதழ் தாமதத்தினால் இந்தப் படம் வெளியீடு தடைப்பட்டது
இந்நிலையில் மீண்டும் ‘பார்ட்டி’ பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் சான்றிதழைப் பெற்று படத்தை வெளியிட வேண்டும் என்ற முனைப்பில் தயாரிப்பு தரப்பு இறங்கியிருக்கிறது. டிசம்பரில் பட வெளியீடு இருக்கும் என்று டி.சிவா அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.