அரசு பேருந்தில் காவலர்கள் கட்டணமின்றி பயணிக்க முடியாது என போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் இருந்து தூத்துக்குடி சென்று கொண்டிருந்த அரசு பேருந்தில் காவலர்
ஒருவர் ஏறியுள்ளார். இந்நிலையில் பேருந்து நடத்துனர் காவலரிடம் டிக்கெட் எடுக்க கேட்டபோது காவலர் சீருடையில் இருப்பதால் டிக்கெட் எடுக்க முடியாது என்றும், நாங்களும் அரசு வேலை பார்ப்பவர்கள் என்னால் டிக்கெட் வாங்க முடியாது என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் காவலர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
அதன்படி போக்குவரத்துதுறை தற்போது அதிரடியாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அரசு பேருந்தில் காவலர்கள் கட்டணம் இன்றி பயணிக்க முடியாது என்றும் உரிய வாரத்தில் இருந்தால் மட்டுமே இனி காவலர்கள் பேருந்தில் கட்டணம் இன்றி பயணிக்க முடியும் எனவே பயண சீட்டு எடுக்க காவலர்கள் மறுத்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது