தமிழ்நாட்டில் 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றும் அனைத்துவகைப் பணியாளர்களை பணியிடமாறுதல் செய்ய பள்ளிக்கல்வித்துறை அதிர உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில்: பள்ளிக் கல்வித் துறையில் அனைத்துவகை இயக்ககங்கள் / அலுவலகங்கள் நிர்வாகம் திறம்பட செயல்படும் பொருட்டு, பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றும் அனைத்துவகைப் பணியாளர்கள் மூன்று வருடத்திற்கு மேல் ஒரே அலுவலகத்தில்/ பணியிடத்தில் பணிபுரியும் பட்சத்தில் அவர்களை மாறுதல் செய்திடவும் மற்றும் பொதுவான விருப்ப மாறுதல் ஆண்டு தோறும் நடத்திடவும் அரசால் நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்படும் அலுவலகங்கள் / ஆசிரியர் தேர்வு வாரியம் / இயக்ககங்கள் / பள்ளிகள் / இயக்ககங்கள்/ 30.06.2024 அன்றைய நிலவரப்படி 3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் நேர்முக உதவியாளர். கண்காணிப்பாளர் / பதவி உயர்த்தப்பட்ட கண்காணிப்பாளர் / உதவியாளர் / இளநிலை உதவியாளர் / தட்டச்சர் / சுருக்கெழுத்து தட்டச்சர்-1.2.3 விவரங்கள் இணைப்பில் கண்ட படிவத்தில் பணியிட வாரியாக (Category wise) தனித்தனியாக a3sec.tndse@gmail.com / cosea4sec@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு (05.07.2024) அன்று மாலை 5.00மணிக்குள் அனுப்பி வைக்குமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் தங்கள் கட்டுபாட்டிலுள்ள அனைத்து அலுவலகங்களில் பணிபுரியும் பணியாளர் விவரங்கள் விடுபடாமல் முழுமையான வகையில் விவரம் அளிக்க அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொண்டுள்ளனர்.