விலை வரலாறு காணாத வகையில் நாளுக்கு நாள் புதிய ஏற்ற இறக்கங்களை அடைந்து வருகிறது. கடந்த மாதம் 30ம் தேதி ஒரு சவரன் ரூ.59 ஆயிரத்தை கடந்து புதிய உச்சம் பெற்றது. நேற்று(நவ18) தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ரூ.55,960-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், தங்கம் விலை மேலும் உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(நவ19) சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.56,520-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.7,065-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 2 ரூபாய் உயர்ந்து ரூ.101-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here