ஆண்டுதோறும் தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகையை முன்னிட்டு தொடர் விடுமுறை வரும். இதனையொட்டி நாடு முழுவதும் திரைப்படங்கள் வெளியாவது வழக்கம்.
இந்நிலையில் தீபாவளியின்போது வெளியாகும் முக்கிய படங்களின் பட்டியல் தெரியவந்துள்ளது. அக்டோபர் 31-ம் தேதி வெளியாகும் படங்களின் பட்டியல் வருமாறு :
பிரதர் :
‘பிரதர்’. ஜெயம் ரவி, பிரியங்கா மோகன், விடிவி கணேஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார், ஸ்க்ரீன் சீன் மீடியா தயாரித்துள்ளது.
அமரன் :
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், சிவகார்த்திகேயன், சாய் பல்லவி உள்ளிட்ட பலரும் நடித்துள்ள ‘அமரன்’ திரைப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் சோனி லைவ் இணைந்து தயாரித்துள்ளது.
விடாமுயற்சி :
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித், த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா உள்ளிட்ட பலரும் நடித்து வரும் ‘விடாமுயற்சி’ படமானது தீபாவளியை முன்னிட்டு திரைக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிளடி பெக்கர் :
தமிழில் தற்போது முக்கிய நடிகராக வலம் வரும் கவின் நடிப்பில் உருவாகி வரும் படம்தான் ‘பிளடி பெக்கர்’. நெல்சன் திலீப்குமாரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த சிவபாலன் இயக்கத்தில் உருவாக்கி வரும் இந்த படமும் தீபாவளியை முன்னிட்டு திரைக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.