பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக்கூட்டணி 2019-ல் பெற்ற இடங்களைப் போலவோ அல்லது அதை விட சற்று கூடுதலான இடத்தை பிடித்து பாஜக ஆட்சி அமைக்கும் என்று கூறியுள்ளார்.

தேர்தல் வியூகம் அமைத்துக் கொடுக்கும் நிறுவனத்தை நடத்தி வரும் தேர்தல் வியூக நிபுணரா பிரசாந்த் கிஷோர் நேற்று தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்,

பாஜக ஆட்சிக்கு எதிராக, பாஜக தலைவர்களுக்கு எதிராக பெரிய அளவில் எதிர்ப்பு இருந்தால், மக்கள் ஆளுங்கட்சிக்கு எதிராக வாக்களித்து மாற்றத்தை எதிர்பார்ப்பார்கள். ஆனால், நாடு தழுவிய அளவில் மத்திய அரசுக்கு எதிராகவும், பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்களுக்கு எதிராகவும் நம் மக்களிடம் கோபத்தை பார்க்க முடியவில்லை என்றும் மத்திய அரசுக்கு எதிரான எதிர்ப்பு, அதிருப்தி அலை மக்களிடம் இல்லை. ராகுல் காந்தி ஆட்சிக்கு வரலாம் என்று அவருடைய ஆதரவாளர்கள் சொல்லலாம். காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி ஆட்சிக்கு வந்தால் சிறப்பாக இருக்கும் நம்முடைய நிலை முன்னேற்றம் அடையும் என மக்கள் உணர்வதாக என்ற வாக்கியங்களை எங்கேயும் கேட்க முடியவில்லை.

தேர்தல் பிரச்சாரக் களத்தில் அரசியல் சலசலப்புகள் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் பாஜக மீண்டும் ஆட்சி அமைப்பதை தடுப்பதற்கான எந்த அபாயத்தையும் பார்க்க முடியவில்லை. எனவே ஆளுங்கட்சி பெறும் சீட்களின் எண்ணிக்கையில் பெரிய மாற்றம் இருக்காது என்றும் 2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவின் மற்றுமொரு வெற்றிக்கு பிரதமர் நரேந்திர மோடி வழிநடத்துவார். பிரதமர் மோடி தலைமையிலான பாஜக மீண்டும் ஆட்சிக்கு திரும்பும் என்றும் அவர் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here