பொதுமக்களிடையே இப்போதைய சூழ்நிலையில் உணவு முறையில் அதிக மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.
பெருமளவில் ஹோட்டலில் தயாரிக்கப்படும் பாஸ்ட் புட் போன்ற உணவுகளை சாப்பிடவே அதிகமான ஆர்வம் காட்டுகின்றனர். இந்த உணவு முறையால் அதிகப்படியான உடல் பாதிப்புகள் ஏற்படலாம் என்ற பல்வேறு ஆய்வு அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
எனவே வீட்டில் சமைக்கப்படும் உணவு முறையே உடலுக்கு நல்லது என்று கூறப்பட்டு வந்த நிலையில்
தற்பொழுது வீட்டில் தயாரிக்கப்படும் உணவுகள் கூட உடலுக்கு ஆபத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.
அதிக கொழுப்பு, அதிக சர்க்கரை அல்லது அதிக உப்பு சேர்த்து வீட்டில் தயாரிக்கப்படும் உணவுகளால் எடை அதிகரிப்பு, ரத்தக்குழாய் அடைப்பு போன்ற உடல்நல பிரச்சனைகளுக்கு வழிவகிக்கும், அதுமட்டுமின்றி அதிக வெப்ப நிலையில் சமைப்பது வருப்பது புற்றுநோய் மற்றும் பிற உடல்நல பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்றும் கூறுகிறார்கள்.
குறிப்பாக காய்கறிகளை அதிக நேரம் சமைப்பதால் அதிலிருந்து கிடைக்க வேண்டிய ஊட்டச்சத்து, வைட்டமின் மற்றும் தாதுக்கள் சரியாக கிடைக்காது என்றும் சமையலில் அதிகப்படியான எண்ணெய் அல்லது வெண்ணெய் பயன்படுத்தி செய்யப்படும் உணவுகளில் இருக்கும் கலோரி மற்றும் கொழுப்பு அதிகமாக ஆபத்தை விளைவிக்கும் என்றும் ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.