சின்னத்தை பார்த்து ஓட்டளிக்காமல் வேட்பாளரை பார்த்து ஓட்டளியுங்கள்’ என பா.ம.க., தலைவர் அன்புமணி தேர்தல் பிரசாரத்தில் பேசுகையில் குறிப்பிட்டார்.
தர்மபுரி பா.ம.க., வேட்பாளர் சவுமியாவை ஆதரித்து, மொரப்பூரில் தேர்தல் பிரசாரத்தில் அன்புமணி பேசியதாவது: தமிழகத்தில் திமுகவும், அதிமுகவும் 57 ஆண்டுகள் மாறி மாறி ஆட்சி செய்து கொண்டிருக்கின்றன. ஆனால் நல்லது மட்டும் நடக்கவில்லை. இரு கட்சிகளின் ஆட்சியில் குடிப்பதற்கும், விவசாயத்திற்கும் கூட முறையான தண்ணீர் இல்லை.
அதுமட்டுமல்ல, திமுக வேட்பாளர் தலைமையை கேட்காமல் ஏதும் செய்யமாட்டார். அதிமுக வேட்பாளரை பக்கத்து தெருவில் உள்ளவர்களுக்கே தெரியாது. இலை, சூரியனுக்கு ஓட்டளித்தது போதும், சின்னத்தை பார்த்து ஓட்டளிக்காமல் வேட்பாளரை பார்த்து ஓட்டளியுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.