தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ என்ற நூலை வெளியிட்டார் அந்த விழாவுக்கு அவரது கட்சி நிர்வாகிகள் பல மாவட்டங்களிலிருந்து வருகை தந்தனர். முதலில் இந்நூலை திருமாவளவன் வெளியிடுவதாகவே இருந்தது. ஆனால் கூட்டணிக்குள் இதைக் கொண்டு ஏதேனும் சலசலப்பு உருவாகும் என்று நினைத்த அவர், விழாவில் கலந்து கொள்வதைத் தவிர்த்திருந்தார்.

விஜய் வெளியிட்டால் என்ன? அவரது கருத்தை அவர் பேசப்போகிறார். திருமாவளவன் அவரது கருத்தை முன்வைக்கப் போகிறார் என்று ஒரு தரப்பினர் வாதிட்டு வருகின்றனர்.இந்த விழாவில் விஜய்யுடன் முன்னாள் நீதிபதி சந்துரு பங்கேற்றார். அம்பேத்கர் பேரன் ஆனந்த டெல்டும்ரே கலந்து கொள்கிறார். விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா கலந்து கொண்டு நூல் உருவாக்கம் பற்றி பேசி இருந்தார். இதை வாய் ஆஃப் காமன் என்ற அவரது நிறுவனமும் இணைந்து வெளியிட்டது.

தற்பொழுது இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here