புதுடெல்லி: தனது வாட்ஸ்-அப் கணக்கை மீட்டுத்தரகோரி உச்சநீதிமன்றத்தை அணுகியவருக்கு அரட்டை செயலியை பயன்படுத்த அறிவுறுத்தியுள்ளது.
பெண் மருத்துவர் ராமன் குந்தரா என்பவர் தந்து வாட்ஸ்-அப் கணக்கு பிளாக் செய்யப்பட்டுள்ளது தனது அடிப்படை உரிமை மீறல் என்றும் இந்த தடையை நீக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.எனது தொழில்முறை மற்றும் தனிப்பட்ட தகவல் தொடர்பிற்கு எனக்கு வாட்ஸ்-அப் அவசியம் என தனது வாதங்களை முன்வைத்தார்
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் தங்களது தீர்ப்பில், வாட்ஸ்-அப் போன்ற தனியார் நிறுவனங்களை அணுகுவது அடிப்படை உரிமையாக கருதப்படாது. வாட்ஸ்-அப் ஒரு தனியார் நிறுவனம் அதன் பயனர்கள், அந்த நிறுவனத்தின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டவர்கள். உள்நாட்டு தயாரிப்பான Zoho- வின் அரட்டை செயலியை பயன்படுத்த அறிவுறுத்தல் வழங்கி இந்த மனுவை தள்ளுபடி செய்தது.
2021ஆம் ஆண்டு Zoho நிறுவனத்தின் சார்பில் வெளியிடப்பட்ட அரட்டை செயலி , சமீபகாலமாக அதிகளவு பதிவிறக்கம் செய்து பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.