ஆந்திராவில் கூகுளின் மெகா முதலீடு – இந்தியாவின் டிஜிட்டல் எதிர்காலம் தொடக்கம்

ஆசியாவின் மிகப்பெரிய AI மையம் தொடக்கம்: "அனைவருக்கும் AI" என்பதை உறுதி செய்யும் – பிரதமர் மோடி, சுந்தர் பிச்சை மகிழ்ச்சி.

Surya
86 Views
1 Min Read
Highlights
  • ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் அமைகிறது கூகுள் நிறுவனத்தின் பிரம்மாண்டமான ஏஐ மையம்
  • இதன் மூலம் நேரடியாகவும்,மறைமுகமாகவும் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும்
  • அனைவருக்கும் ஏஐ என்பது உறுதியாகும் - பிரதமர்.நரேந்திர மோடி பெருமிதம்
  • ஏஐ மூலம் கண்டுபிடிப்புகளை துரிதப்படுத்தி, நாடு முழுவதுமான வளர்ச்சியை முன்னெடுப்போம் - கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் அமைகிறது  கூகுள் நிறுவனத்தின் பிரம்மாண்டமான ஏஐ  மையம்.ரூ.88.187 கோடியில் இந்த ஏஐ மையம் அமைக்கப்படும் என்று கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.ஆசியாவின் மிகப்பெரிய ஏஐ  மையம் இந்தியாவில் அமைவதன் மூலம் இது முக்கியவத்துவம் பெறுகிறது.2026 ஆம்  ஆண்டு முதல் இந்த திட்டம் படிப்படியாக செயல்படுத்தப்பட உள்ளது.

ஏற்கனவே அதானி,எல்ஜி எலக்ட்ரானிக்ஸ் போன்ற நிறுவனங்கள் ஆந்திராவில் முதலீடு செய்துள்ள நிலையில்,கூகுள் நிறுவனத்தின் இந்த முதலீடு மேலும் முக்கியத்துவம் பெறுகிறது.இதன் மூலம் நேரடியாகவும்,மறைமுகமாகவும் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்திய இளைஞர்களின் வேலைவாய்ப்பு மற்றும் திறன்களை மேம்படுத்த இந்த ஏஐ மையம் உதவியாக இருக்கும் என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள  தனது எக்ஸ் பதிவில்,ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் கூகிள் ஏஐ மையம் தொடங்கப்பட்டதில் மகிழ்ச்சி.இது தொழில்நுட்பத்தை ஜனநாயகப்படுத்துவதில் இது ஒரு சக்தியாக இருக்கும்.இதன் மூலம்  அனைவருக்கும் ஏஐ  என்பது உறுதியாகும்.நமது டிஜிட்டல் பொருளாதாரத்தை மேம்படுத்தும் எனவும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சுந்தர் பிச்சை வெளியிட்டுள்ள தனது எக்ஸ் பதிவில்,விசாகப்பட்டினத்தில் முதன்முதலாக அமைக்கப்படும் கூகிள்  ஏஐ மையத்திற்கான எங்கள் திட்டங்களை பகிர்ந்து கொள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் பேசுவதில் மகிழ்ச்சி.இந்த ஏஐ மையத்தில் ஜிகாவாட் அளவிலான கணினி திறன் சர்வேதேச கடலுக்கடி இணைய இணைப்பு ஆகியவற்றை ஒருங்கிணைக்கிறது. இந்தியாவின் தொழில்துறை நிறுவனங்கள் மற்றும் பயனர்களுக்கு எங்கள் தொழில்நுட்பத்தை கொண்டு செல்வோம்.இந்த ஏஐ மையம் மூலம் கண்டுபிடிப்புகளை துரிதப்படுத்தி, நாடு முழுவதுமான வளர்ச்சியை முன்னெடுப்போம் என தெரிவித்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply