தமிழ்நாட்டில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கை ( SIR ) நவம்பர் 4- ஆம் தேதி முதல் துவங்கும் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கைக்கு திமுக, விசிக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினரான ரவிகுமார்,
சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கையை விஜய் எதிர்க்கிறாரா? இது குறித்து விஜய் வாய் திறப்பாரா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டு இருக்கும் எக்ஸ் பதிவில்,
” எஸ்.ஐ.ஆர் நடவடிக்கையை விஜய் எதிர்க்கிறாரா? தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தை தமிழ்நாட்டின்மீது அக்கறையுள்ள கட்சிகள் எதிர்க்கின்றன. இது தேர்தல் ஆணையத்தின் துணையோடு பாஜக மேற்கொள்ளும் வாக்குத் திருட்டு எனக் குற்றம் சாட்டுகின்றன. பாஜகவைத் தனது கொள்கை எதிரி எனக் கூறும் தவெக இதை எதிர்க்கிறதா? திரு #விஜய் அவர்கள் வாய் திறப்பாரா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

