மூன்று நாள் சுற்றுப்பயணமாக தமிழகம் வந்துள்ளார் துணை குடியரசு தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன். இந்நிலையில் நேற்று இரவு மதுரையில் உள்ள அரசு விருந்தினர் இல்லத்தில் தங்கி இருந்த துணை குடியரசு தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனை மரியாதை நிமித்தமாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசியுள்ளார்.
மேலும் துணை குடியரசு தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு பொன்னாடை போர்த்தி, நினைவு பரிசு வழங்கியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டு இருக்கும் எக்ஸ் பதிவில்,
” நம் தமிழ்நாட்டில் பிறந்து நாட்டின் மாண்புமிகு குடியரசுத் துணைத் தலைவராக உயர்ந்துள்ள திரு. சி.பி.ராதாகிருஷ்ணன் அவர்களை மாமதுரை மண்ணில் சந்தித்து உரையாடினேன். தமது சீரிய பணிகளால் அவர் நம் தமிழ்நாட்டுக்கும் இந்திய நாட்டுக்கும் பெருமை சேர்ப்பார்!” என தெரிவித்துள்ளார்.

