வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு நாள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை

Surya
29 Views
1 Min Read

வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு  நாள்,தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் முக்கிய அமைச்சர்கள்  அவரது திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

அந்நிய ஆதிக்கத்துக்கு அடிபணிந்து வரிகட்ட மறுத்து, அஞ்சாநெஞ்சனாகப் போர் நடத்திய விடுதலை நாயகர் வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களது நினைவு நாள்!

சிப்பாய்ப் புரட்சிக்குப் பல ஆண்டுகள் முன்னரே விடுதலைப் போராட்ட உணர்வைப் பரவச் செய்து, உறுதி குலையாமல் போராடி உயிர் துறந்த பாஞ்சாலங்குறிச்சிப் பாளையக்காரராம் கட்டபொம்மனின் தியாகம் தமிழ் மண்ணின் தன்மான உணர்வுக்குச் சான்றாக என்றும் போற்றப்படும்! என தெரிவித்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply