கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு பிறகு, தவெக கட்சியின் சார்பில் ஒரு மாத காலம் எவ்வித அரசியல் செயல்பாடுகளும் நடைபெறாமல் இருந்து வந்தது. இந்நிலையில் தவெக வின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் இன்று ( நவம்பர் 5) நடைபெற்று வருகிறது.
இந்த பொதுக்குழுவில் முதலாவதாக, கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.பின்னர் தமிழ்த்தாய் வாழ்த்துடன் கூட்டம் துவங்கியது.
கூட்டத்தில் முதலாவதாக பேசிய தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த்,
நாம் கடந்து வந்த பாதை சாதாரணமது அல்ல. இன்று அரசியலின் மையப்புள்ளியே தமிழக வெற்றி கழகம் தான். மக்கள் மாற்றத்தை எதிர்நோக்கி காத்துக்கொண்டு இருக்கிறார்கள்.
ஒரு மாபெரும் இயக்கத்திற்கு கட்டுப்பாடு மிகவும் அவசியம். 2026 – ல் தலைவர் விஜய் முதலமைச்சர் இருக்கையில் அமர்வதற்கு நாம் அனைவரும் உழைக்க வேண்டும். வரலாறு நம்மை வரவேற்கிறது என பேசினார்.


