பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 118- வது ஜெயந்தி மற்றும் குருபூஜையை ஒட்டி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டு இருக்கும் எக்ஸ் பதிவில்,
: அடக்குமுறைச் சட்டங்களின் ஆதிக்கத்தில் இருந்து நம் மக்களை மீட்டு, நேதாஜி அவர்களின் நம்பிக்கைக்குரியவராக நாட்டு விடுதலைக்குப் போராடிய தீரர் முத்துராமலிங்கத் தேவர் திருமகனாரின் ஜெயந்தியில் அவரது திருவுருவச் சிலைக்கும், பசும்பொன் நினைவிடத்திலும் எனது மரியாதையைச் செலுத்தினேன். மேலும் மதுரை தெப்பகுளத்தில் மானம் காத்த மருதிருவர் திருவுருவச் சிலைக்கும் மலர் மாலை அணிவித்து வணங்கினேன். பசும்பொன்னில் மாபெரும் திருமண மண்டபம் கட்டப்படும் என்ற புதிய அறிவிப்பை வெளியிட்ட மனநிறைவுடன் சென்னைக்குத் திரும்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை!
பசும்பொன் தேவர் ஜெயந்தியில், முதல்வர் மு.க.ஸ்டாலின் புதிய திட்ட அறிவிப்புடன் மரியாதை செலுத்தினார்.

Highlights
- முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் 118-வது ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா.
- தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பசும்பொன் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.
- பசும்பொன்னில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் திருமண மண்டபம் கட்டப்படும் என்ற புதிய அறிவிப்பு வெளியீடு.
Leave a Comment

