“பெரியார் உலகம்”: திமுக சார்பில் ரூ 1.7 கோடி வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!.

தந்தை பெரியாரின் சமூக நீதிப் பாதையில் தமிழ் இனம் தலைநிமிர, சிறுகனூரில் அமையும் 'பெரியார் உலகம்' – திமுகவின் பெரும் பங்களிப்பு

Surya
126 Views
1 Min Read
Highlights
  • பெரியார் உலகத்திற்கு திமுக சார்பில் ரூ. 1.70 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது
  • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியிடம் நிதியை வழங்கினார்
  • திருச்சி சிறுகனூரில் 27 ஏக்கர் பரப்பளவில் 'பெரியார் உலகம்' அமையவுள்ளது

தந்தை பெரியாரின் சமூக புரட்சிகரமான செயல்பாடுகளை போற்றும் வகையில், திருச்சி – சிறுகனூரில் “பெரியார் உலகம்” அமையவுள்ளது.இதற்கு திமுக சார்பில்

சட்டமன்ற – நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒருமாத ஊதியமான ரூ. 1,70,20,000-ஐ திராவிடர் கழக தலைவர் கி.வீரமணியிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டு இருக்கும் எக்ஸ் தள பதிவில்,

“தமிழுலகம் பகுத்தறிவும் சுயமரியாதையும் பெற உழைத்திட்ட தந்தை பெரியாரின் புகழ் சொல்லும் வகையில் திருச்சி – சிறுகனூரில் அமையும் “பெரியார் உலக”த்துக்கு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டமன்ற – நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒருமாத ஊதியமான ரூ. 1,70,20,000-ஐ தமிழர் தலைவர் மானமிகு ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினேன்!

பெரியார் எனும் பெருநெருப்பின் பேரொளியில் தமிழினம் தலைநிமிர்ந்து நடைபோடும்!” என தெரிவித்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply