பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 118- வது ஜெயந்தி மற்றும் குருபூஜையை ஒட்டி, துணை குடியரசு தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய அரசியல் பிரமுகர்கள் மற்றும் தலைவர்கள் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் சிலை மற்றும் நினைவிடத்தில் மரியாதை செலுத்தி வருகின்றனர்.
அந்த வரிசையில், பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில் மரியாதை செலுத்த தமிழக முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஒரே காரில் பயணம் செய்துள்ளனர்.
அதிமுக பல அணிகளாக பிரிந்து இருக்கும் சூழலில், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் செங்கோட்டையன் இருவரும் தான் அதிமுக ஒன்றிணைய வேண்டும் என கூறி வருகின்றனர்.
அதிமுகவில் ஏற்கனவே உட்கட்சி பிரச்சனைகள் நீடித்து வரும் நிலையில், இரு மூத்த தலைவர்களின் இந்த பயணம் அரசியல் வட்டாரத்தில் சுவாரசியத்தை கூட்டியுள்ளது.
தேர்தல் நெருங்கும் நேரத்தில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் செங்கோட்டையன் இருவரது நடவடிக்கைகளும் முக்கியத்துவம் பெறுகிறது.


