தவெக வினர் கட்சியின் சார்பில் யாரும் தீபாவளி கொண்டாட வேண்டாம் என்று அக்கட்சியின் கொள்கைப் பரப்பு இணைச் செயலாளர் லயோலா மணி தனது எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
“கரூரில் நிகழ்ந்த எதிர்பாராத சம்பவத்தால் நம்மைவிட்டுப் பிரிந்த நம் சொந்தங்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், நம் கழகத் தலைவர் அண்ணன் விஜய் அவர்களின் அறிவுறுத்தலின்படி, இந்த ஆண்டு கழகத்தின் சார்பில் யாரும் தீபாவளிப் பண்டிகையை கொண்டாட வேண்டாம்” என தெரிவித்துள்ளார்.