சட்டம் இயற்றும் அதிகாரம் சட்டப்பேரவைக்கே சொந்தம்! – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சட்டம் இயற்றும் அதிகாரம் சட்டப்பேரவைக்கே சொந்தம்; ஆளுநரின் பரிந்துரையை நிராகரித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்

Surya
69 Views
0 Min Read
Highlights
  • ஆளுநர் ஆர்.என்.ரவியின் கருத்துக்களை நிராகரித்து தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
  • சித்த மருத்துவப் பல்கலைக்கழக சட்ட முன்வடிவு தொடர்பாக ஆளுநர் தெரிவித்த கருத்துகள் அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணானவை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்
  • சட்டம் இயற்றும் அதிகாரம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவைக்கே உள்ளது எனத் தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டது

தமிழ்நாடு சித்த மருத்துவ பல்கலைக்கழக மசோதா தொடர்பாக ஆளுநர் தெரிவித்து இருக்கும் கருத்துக்களை நிராகரித்து சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டு இருக்கும் எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது,

“சட்டம் இயற்றும் அதிகாரம் முழுக்க முழுக்க மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவைக்கே சொந்தம்!

தமிழ்நாடு சித்த மருத்துவப் பல்கலைக்கழகச் சட்டமுன்வடிவு தொடர்பாக ஆளுநர் அனுப்பியுள்ள செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பேரவையின் மாண்பைக் குறைக்ககூடிய வார்த்தை அடங்கிய பகுதிகளைத் தமிழ்நாடு சட்டப்பேரவை நிராகரித்தது”. என தெரிவித்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply