சென்னையில் நடைப்பெற்ற பாரதிதாசன் மேலாண்மை கல்வி நிறுவனத்தின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
இந்நிகழ்வில் மாணவர்கள் மத்தியில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்,
” இந்தியாவிலேயே உயர்கல்வியில் விளங்கக்கூடிய சிறந்த மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது. உயர்கல்வி சேர்க்கை விகிதம், N.I.R.F. தரவரிசை என்று பல குறியீடுகள் அதற்கு சான்றாக இருக்கிறது. இப்படி உயர்கல்வியில் தமிழ்நாடு சிறக்க காரணம் யார்? ஒருகாலத்தில் கல்வி மறுக்கப்பட்ட சமூகங்களில் எல்லாம் இன்றைக்கு படித்து முன்னேறி, உலகம் முழுவதும் Top Position-ல் இருக்கிறோம் என்றால், அதற்கு காரணம் யார்? திராவிட இயக்கம்!
இந்த அடித்தளத்தில், உயர்கல்வியில் தலைசிறந்த தமிழ்நாட்டை கட்டமைத்தவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்! உயர்கல்விக்கு என்று ஏராளமான திட்டங்கள் கல்விக் கட்டணச் சலுகைகள்,புதிய பல்கலைக்கழகங்கள் நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகள் என்று உயர்கல்விக்காக அதிகமாக செய்தவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்.
அதன் தொடர்ச்சியாகதான், நம்முடைய திராவிட மாடல் அரசும், ஏழை எளிய மாணவ மாணவியரும், உலக தரத்தில் கல்வி பெற வேண்டும் என்று, முதலமைச்சரின் காலை உணவு திட்டம் – கல்லூரி படிக்கும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் தமிழ்ப் புதல்வன் மற்றும் புதுமைப்பெண் திட்டம் படித்து முடித்ததும் உடனடியாக வேலைவாய்ப்புப் பெறுவதற்காக நான் முதல்வன் திட்டம் அறிவியல் ஆய்வுகளை ஊக்குவிப்பதற்கு முதலமைச்சரின் ஆய்வு திட்ட நிதி உதவி – வசதி வாய்ப்பு இல்லாத வீட்டுப் பிள்ளைகளும், உலகின் முன்னணி உயர்கல்வி நிறுவனங்களில் சேர வேண்டும் என்று மாதிரிப் பள்ளிகள், தகைசால் பள்ளிகள் என்று பல்வேறு முன்னோடி திட்டங்களை செயல்படுத்திக் கொண்டு வருகிறோம்!
உலகம் எந்த வேகத்தில் மாற்றம் அடைகிறதோ, அந்த வேகத்திற்கு நாமும் ஈடுகொடுத்து ஓட வேண்டும்! கொஞ்சம் அசந்தாலும், ‘Outdate’ ஆகிவிடும் என்று சொல்லிவிடுவார்கள்.
பதவியோ, அதேபோல், லீடர்ஷிப் என்றால், ஒருவர் வகிக்கக்கூடிய அவர்கள் சம்பளமோ கிடையாது! அவர்கள் உருவாக்கும் பாசிட்டிவ் தாக்கம்தான்!இந்த ஏ.ஐ. காலத்தில், உங்களின் நேர்மைதான் உங்கள் அறிவை அளவிட உதவும்! வெற்றிக்கும் ஒழுக்கத்திற்கும் இடையே சமநிலை
மிகவும் அவசியம்! எத்தனை மாற்றங்கள், வளர்ச்சிகள் வந்தாலும், சில Basics எப்போதும் மாறாது! அதில் நீங்கள் உறுதியாக இருக்க வேண்டும்!” என பேசினார்.

