தமிழ்நாட்டில் மின் இணைப்பு இல்லாத கிராமங்களே இல்லை என்பது போல் ஒவ்வொரு வீட்டிலும் தற்போது பெருமளவில் மின் இணைப்பு வந்துவிட்டது. வீட்டு பயன்பாட்டிற்காக 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. அதுபோலவே விவசாயத்திற்கு மும்முனை மின்சாரம் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தற்போது கோடைக் காலம் என்பதால் ஏசி, குளிர்சாதன பெட்டி மற்றும் மின்விசிறி ஆகியவற்றின் பயன்பாடு அதிகரித்துள்ளதால் தமிழ்நாடு முழுவதும் மின் தேவை கடந்த இரண்டு மாதங்களாக புதிய உச்சங்களை தொட்டுள்ளது.மின் தேவை அதிகரித்தாலும் அதனை சமாளித்து மின் தடை இல்லாமல் தொடர்ந்து மின்சாரம் வழங்கப்பட்டு வருவதாக மின் உற்பத்தி மற்றும் பகிர்மானம் கழகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து மத்திய எரிசக்தித்துறை அமைச்சர் ஆர்.கே. சிங், “இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் குறைந்த அளவு மின் தடை கொண்ட மாநிலம் என்றும் தமிழ்நாட்டின் மின்சார நம்பகத்தன்மை என்பது வளர்ந்த நாடுகளுக்கு சமமானது” என்று பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சரே மின் தடை குறைவு என தமிழ்நாட்டை பாராட்டியுள்ளது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.