கோடை விடுமுறை முடிந்து ஒன்றரை மாதங்களுக்குப் பிறகு இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன. முதல் நாளில், மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்க பள்ளிகள் ஏற்பாடு செய்து உள்ளன.
இறுதித் தேர்வுகளுக்குப் பிறகு, கோடை விடுமுறை ஏப்ரல் 25-ஆம் தேதி தொடங்கியது. புதிய கல்வியாண்டிற்காக ஜூன் 3-ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளன.
லோக்சபா தேர்தல் முடிவுகள், ஜூன், 4ல் வெளியாக இருந்ததால், பள்ளிகள் திறப்பு, ஜூன், 6ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.பின்னர், வடமாநிலங்களில், வழக்கத்துக்கு மாறாக, வெப்பம் நிலவியதால், பள்ளிகள் திறப்பது, மீண்டும் தாமதமானது.
இந்நிலையில் புதிய கல்வியாண்டுக்கான வகுப்புகள், இன்று மீண்டும் ஆரம்பமாகவுள்ளது.
அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள் இன்று முதல் வகுப்புகள் நடத்த அனுமதிக்கப்படுகிறது.
அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில், இன்று பாட புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள் மற்றும் அட்லஸ் வரைபட புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட உள்ளன
தனியார் பள்ளிகளில் விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள், தேவையான உபகரணங்கள், சீருடைகள் வழங்கப்பட்டன.
அதேநேரம், முதல் நாளான இன்று புதிய கல்வி ஆண்டுக்கான வழிகாட்டும் வகுப்புகள் மற்றும் உளவியல் கவுன்சிலிங் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.