இந்திய மகளிர் கிரிக்கெட் அணி முதல் முறையாக உலகக்கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளனர்.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் வெற்றிக்கு நாட்டின் முக்கிய தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இது குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில்,
“ஐசிசி உலகக்கோப்பை போட்டியில் இந்திய மகளிர் அணி சிறப்பான வெற்றியை பெற்றுள்ளது. இறுதிப்போட்டியில் இவர்களின் ஆட்டம்சிறந்த திறன் , மற்றும் உறுதியை வெளிப்படுத்தியது. போட்டி முழுவதும் கூட்டுமுயற்சியை அணி வெளிப்படுத்தியது. எங்கள் வீராங்கனைகளுக்கு வாழ்த்துக்கள். இந்த வரலாற்று வெற்றி எதிர்கால சாம்பியன்கள் விளையாட்டை தேர்ந்தெடுக்க ஊக்குவிக்கும்’ என தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில்,
” இந்திய கிரிக்கெட்டுக்கு என்ன ஒரு தருணம்.
நமது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, உலகக்கோப்பையை வென்றதன் மூலம் இந்திய உச்சத்தை எட்டியுள்ளது.
திறமை,அமைதி, மற்றும் குழு செயல்பாட்டின் அற்புதமான வெளிப்பாட்டிற்காக இந்திய அணிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
இந்த வெற்றி வரும் தலைமுறையினரை பெரிய கனவுகளை காணவும், தைரியமாக விளையாடவும் ஊக்குவிக்கும்” என தெரிவித்துள்ளார்.

