பஹ்ரைனில் நடைபெற்ற ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த தடகள வீராங்கனை தங்கை எட்வினா ஜேசன் 2 வெள்ளிப் பதக்கங்கள் வென்றுள்ளார். வீராங்கனை எட்வினா ஜேசனை நேரில் அழைத்து துணை முதல்வர் உதயநிதி பாராட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டு இருக்கும் எக்ஸ் பதிவில்,
“பஹ்ரைனில் நடைபெற்ற 3ஆவது ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் 2 வெள்ளிப் பதக்கங்கள் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த தடகள வீராங்கனை தங்கை எட்வினா ஜேசனுக்கு ரூ.25 லட்சம் ஊக்கத்தொகையை இன்று வழங்கினோம். சர்வதேச அரங்கில் தமிழ்நாட்டுக்கு பெருமைச் சேர்த்துள்ள தங்கை எட்வினாவை வாழ்த்தினோம். அவரது இந்த சாதனை தொடரட்டும் என பாராட்டி மகிழ்ந்தோம்” என தெரிவித்துள்ளார்.

