இந்திய மகளிர் அணிக்கு கிரிக்கெட் வீரர் விராட் கோலி பாராட்டு
மகளிர் உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில், ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தி இந்திய மகளிர் அணி இறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளது. இந்திய அணியை சேர்ந்த ஜெமிமா 127 ரன்கள் அடித்து ஆட்ட நாயகி விருதை பெற்றிருக்கிறார்.
இந்நிலையில் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு முக்கிய தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.அந்த வரிசையில், கிரிக்கெட் வீரர் விராட் கோலியும் பாராட்டி இருக்கிறார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டு இருக்கும் எக்ஸ் பதிவில்,
“ஆஸ்திரேலியா போன்ற பலமான அணியை வீழ்த்தி நம் இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு வெற்றிபெற்றுள்ளது.
சிறப்பாக சேஸ் செய்துள்ளது இந்திய அணி.
முக்கியமான பெரிய போட்டியில் ஜெமிமாவின் ஆட்டம் சிறப்பாக இருந்தது.
இந்த வெற்றி உண்மையான மனஉறுதி, நம்பிக்கை மற்றும் ஆர்வத்தின் வெளிப்பாடு. வெல்டன் இந்தியன் டீம்!” என தெரிவித்துள்ளார்.

