கடல் படத்தின் மூலம் தமிழில் கதாநாயகனாக அறிமுகமானவர் கௌதம் கார்த்திக். அதனைத்தொடர்ந்து வை ராஜா வை, ரங்கூன், ஆக.16 1947 ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் இன்று பிறந்தநாள் காணும் கௌதம் கார்த்தியின் புதிய படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

ஜி.கே.19 எனத் தற்காலிகமாக அழைக்கப்படும் இந்த படத்தை எம்.ஜி.ஸ்டூடியோஸ் சார்பில் ஏ.பி.வி. மாறன்மற்றும் டாடா இயக்குநர் கணேஷ் கே பாபு இணைந்து தயாரிக்கின்றனர்.இந்தப்படம் குறித்து இயக்குநர் தினா ராகவன் கூறியதாவது, “தென்சென்னையில் உள்ள தரமணி போன்ற பகுதியில் நடக்கும் உள்ளூர் அரசியலை, எளிமையான சம்பவங்களாலும் உண்மைக்கு நெருக்கமாகவும் அரசியல் நையாண்டிகள் கலந்தும் சொல்ல முயற்சிக்கும் படமாக இதை உருவாக்க இருக்கிறோம். சாமானியனின் யதார்த்த வாழ்வியலோடு அரசியலை சற்று காமெடி கலந்து சொல்வது தான் இந்த படம். இந்த படத்தில் கவுதம் கார்த்திக்கின் கதாபாத்திரத்தை அரசியலில் இருக்கும் ஏரியா பையன் போன்று உருவாக்கி இருக்கிறோம். இதுவரை அவர் நடித்ததில் மிகவும் வித்தியாசமான கதாபாத்திரமாக இது இருக்கும். அவரது கதாபாத்திரம் நம் வீட்டில் இருக்கும் ஒருவர் போன்ற உணர்வை ஏற்படுத்தும்.” என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here