தமிழகத்தில் தொழில் முதலீட்டை ஈர்க்க, முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த மாதம் 27ம் தேதி இரவு அரசுமுறை பயணமாக அமெரிக்கா சென்றார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழக அரசுக்கும், நிறுவனங்களுக்கும் இடையே மொத்தம் ரூ.7,616 கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
17 நாள் அமெரிக்கப் பயணத்தை முடித்துக் கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தற்பொழுது சென்னை திரும்பினார். அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் வரவேற்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
பின்னர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர்
“அமெரிக்கா பயணம் வெற்றிகரமானது மற்றும் சாதனை படைத்தது. இது தமிழக மக்களின் சாதனைப் பயணம். அமெரிக்காவில் 17 நாட்கள் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. உலகின் 25 முன்னணி நிறுவனங்களுடன் 19 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது
இதன் மூலம் ரூ.7,616 கோடி முதலீட்டின் மூலம் 11,516 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என அவர் கூறினார்.
அப்போது நிர்மலா சீதாராமனுடன் ஹோட்டல் உரிமையாளர் ஜிஎஸ்டி குறித்து பேசியது குறித்தும், அவர் மன்னிப்பு கேட்டது குறித்தும் முதமைச்சரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு முதலமைச்சர் அளித்த பதில்:
“ஹோட்டல் உரிமையாளர் நியாயமான ஜிஎஸ்டி கோரிக்கைகளை முன்வைத்துள்ளார். இதை நிதியமைச்சர் கையாண்ட விதம் மிகவும் வெட்கபட வேண்டிய ஒன்று இவற்றை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்,” என்று செய்தியாளர் கேள்விக்கு முதலவர் இவ்வாறு பதில் அளித்தார்.