தமிழ்நாட்டில் பணிபுரியும் காவலர்கள் அரசு பேருந்துகளில் பயணிக்க பயணச்சீட்டு கட்டாயம் என்று போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.
இந்நிலையில் பணியில் இருக்கும் காவலர்கள், இன்ஸ்பெக்டர்களுக்கு
பேருந்துகளில் பயணிக்க ஸ்மார்ட் கார்டு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த கார்டு மூலம் காவல்துறையினர் பேருந்துகளில் மாவட்டத்திற்குள் இலவசமாகப் பயணிக்க முடியும் எனக் கூறப்படுகிறது.
அண்மையில் காவலருக்கும், நடத்துனருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், மாவட்ட எஸ்.பிக்கள், கமிஷனர்கள் வாயிலாக காவலர்களுக்கு ஜூலை மாதத்திற்குள் ஸ்மார்ட் கார்டு விநியோகிக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது