இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானார் சமந்தா. இதே படத்தின் தெலுங்கு வெர்ஷனில் கதாநாயகியாக நடித்து தெலுங்கு சினிமாவில் அறிமுகமானார் சமந்தா.
சென்னை பல்லாவரத்தை சொந்த ஊராகக் கொண்ட இவருக்கு தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு சினிமாவிலும் மிகப்பெரிய ரசிகர் கூட்டமும் ஓப்பனிங்கும் இருந்து வருகிறது. இரண்டு மொழிகளிலும் முன்னணி கதாநாயகியாக வலம்வரும் சமந்தா அதிக சம்பளம் வாங்கும் கதாநாயகிகள் பட்டியலில் இருக்கிறார்.
தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்த நடித்த இவருக்கு கடந்த 2022ல் மாயோசிடிஸ் என்கிற பாதிப்பு இருந்ததாக அறிவித்திருந்தார். இதனால் மனதளவிலும் உடலளவிலும் சோர்ந்து போன சமந்தா கடந்தாண்டு விஜய் தேவரகொண்டவுடன் ஜோடியாக நடித்த குஷி திரைப்படத்திற்கு பிறகு ஒரு சிறிய பிரேக் வேண்டும் என வெளிநாடுகளுக்கு சென்று இருந்தார்.
என்னதான் சினிமாவில் இருந்து பிரேக் எடுத்துக் கொண்டாலும் தொடர்ந்து போட்டோஷூட் மூலமாகவும் ரீல்ஸ் மூலமாகவும் ரசிகர்களை குஷிப்படுத்தி வந்தார் சமந்தா.
அந்த வகையில் சமீபத்தில் நடிகை சமந்தா அவரது சொந்த தயாரிப்பு நிறுவனமான ட்ராலாலாலா என்கிற நிறுவனத்தையும் லான்ச் செய்திருந்தார்.
இப்போது சமந்தா, சிடாடல் என்கிற வெப் சீரிஸில் நடித்து வருகிறார். கடந்த சில வாரங்களாகவே சமந்தா இரண்டாவது திருமணம் செய்து கொள்ளப்போவதாக வதந்திகள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. சினிமாவில் இருந்து பிரேக், உடல் நல குறைவு, இப்போது இரண்டாவது திருமணம் வதந்தி இதை அனைத்தையும்விட மற்றொரு விஷயம்தான் முக்கியம் என சமந்தா ஒரு புதிய முன்னெடுப்பை கையில் எடுத்திருக்கிறார்.
டேக் 20 என்கிற சீரியஸை தொடங்கி வெல்னஸ் கோச் அல்கேஷ் சரோத்ரியுடன் ஒரு புதிய பாட்காஸ்ட் தொடங்கியிருக்கிறார் சமந்தா. இதில் மருத்துவம் சார்ந்தும் உடல்நலம் சார்ந்தும் பல விஷயங்களை கேட்டு தெரிந்து கொள்ள போவதாகவும் கூறியிருக்கிறார். சமந்தாவின் புதிய பாட்காஸ்ட்டின் முதல் வீடியோ வருகின்ற பிப்ரவரி 19ஆம் தேதி வெளியாகிறது.
பிரதியுஷா நிறுவனத்தின் மூலம் பல குழந்தைகளின் வாழ்விற்கு வெளிச்சத்தை கொடுத்துவரும் சமந்தா, சகி என்கிற புடவை பிராண்டின் மூலமாக எக்கச்சக்க நெசவாளர்களுக்கு உதவி செய்து வருகிறார்.
அதுபோக ட்ராலாலா என்கிற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் சிறிய கலைஞர்களுக்கு வாய்ப்பு கொடுத்துவரும் சமந்தா தற்போது அவரது புதிய முன்னெடுப்பான உடல் நலம் குறித்து பேசும் சீரியஸை துவங்கி இருக்கிறார். இதற்கு ரசிகர்களும் சக கலைஞர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்…