தமிழ்நாட்டில் உள்ள ரேஷன் கடைகளில் அத்தியாவசியமான உணவு பொருட்கள் வழங்கப்படுகின்றன. இந்த கடைகள் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காலை, 8:30 மணி முதல் பகல், 12:30 மணி வரையும்; பிற்பகல், 3:00 மணி முதல் இரவு, 7:00 மணி வரையும் செயல்படுகின்றன.
மற்ற மாவட்டங்களில் காலை, 9:00 மணி முதல் பிற்பகல், 1:00 மணி வரையும்; பிற்பகல், 2:00 மணி முதல் மாலை, 6:00 மணி வரையும் திறந்திருக்கும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளை மூடுவதற்கும் திறப்பதற்கும் மதியம் 2:30 மணி நேரம் இடைவேளை. இந்த நிலையில், சில ஊழியர்கள் கடையில் இருந்து வாங்காத பொருட்களை வெளியே அனுப்புவது போன்ற முறைகேடுகளில் ஈடுபட்டதை கூட்டுறவு மற்றும் உணவுத் துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
எனவே, மதியம் ரேஷன் கடைகள் மூடும் நேரத்தை குறைக்க அதிகாரிகள் முடிவு செய்தனர். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகிறது.