ராமதாஸ் அறிக்கை:
தமிழகத்தில், கடந்த ஓராண்டாக அரசு பஸ்கள் பழுதடைந்து நிற்பதும், விபத்துக்கு உள்ளாவதும் அதிகரித்து வருகிறது. சென்னை பஸ்சில் ஓட்டை ஏற்பட்டு, பயணி சாலையில் விழுந்து காயமடைந்தார்.
திருச்சியில் பஸ் இருக்கை கழன்று, கண்டக்டர் துாக்கி வீசப்பட்டார். மயிலாடுதுறை உள்ளிட்ட பல இடங்களில், டயர் தனியாக கழன்று ஓடின. பஸ் மேற்கூரை தனியாக கழன்று காற்றில் பறந்தது.
அரசு போக்குவரத்து கழகங்களில் உள்ள 20,926 பஸ்களில், 1,500 பஸ்கள், 15 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகின்றன. தி.மு.க., ஆட்சிக்கு வந்தபின், விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில் தான், புதிய பஸ்கள் வாங்கப்பட்டுள்ளன.
அரசு பஸ்களில், 14,459 பஸ்கள் பழுதுகள் என, கண்டறியப்பட்டுள்ளது. அந்த பஸ்கள், மே 6ம் தேதிக்குள் சரி செய்யப்பட்டு விட்டதாக, அரசு போக்குவரத்து கழகங்கள் அறிவித்திருந்தன. ஆனால், ஒரு பஸ் கூட முழுமையாக பழுது நீக்கப்படவில்லை என்பது தான் உண்மை.