#புத்ர ஜெயா-2
விமானம் தரையிறங்க இருக்கிறது எனவே உங்கள் சீட் பெல்டை அணிந்து கொள்ளுங்கள் என்று ஆங்கிலத்திலும், மலாய் மொழியிலும் ஒரு பெண்ணின் குரல் ஒலித்தது…
சீட் பெல்ட்டை அணிந்து கொண்டேன்…
ஜன்னலோர இருக்கையில் அமர்ந்து, ஆகாயத்தில் இருந்தபடி, பூமியின் அழகை ரசிப்பதென்பது ரம்யமாக இருந்தது..
மலேசிய நாட்டிற்குள் எங்கள் விமானம் நுழைந்து, தரையிறங்க ஆயத்தமானது…
குட்டி குட்டியான தீவுகள்.. அழகிய நதியில் அற்புதமான படகுகள்.. சீரான வீடுகள்… நேர்த்தியான சாலைகள்… அனைத்தும் அழகாக காட்சியளித்தன…
விமானம் ஏறும் போது இருந்த பயம்.. இறங்கும் போது அவ்வளவாக இல்லை.. இருப்பினும் கிஷானின் கைகளை கெட்டியாகப் பற்றிக் கொண்டேன்…
மலேசிய விமான நிலையத்தில் விமானம் நல்லபடியாக தரையிறங்கியது..
ஒவ்வொருவராக வெளியேறினோம்… ஒன்றாக புகைப்படம் எடுத்துக் கொண்டோம்..
வெளியே வந்தபோது எங்களை வரவேற்க ஒரு உள்ளூர் கெய்டு தயாராக இருந்தார்…
அவருடைய வழிகாட்டுதலோடு விமான நிலையத்தை விட்டு வெளியே வந்தோம்…
வெளியே எங்களுக்கென ஒரு பேருந்து தயாராக நின்றிருந்தது..
அதில் ஏறி அமர்ந்தோம்… பேருந்து புறப்பட்டது…
என்னருகில் விகாஷ் அமர்ந்திருந்தான்…
எங்களுக்காக பணியமர்த்தப்பட்ட உள்ளூர் கெய்டு நெல்சன் தன் நேர்த்தியான ஆங்கில மொழியில் அழகாக உரையாடத் தொடங்கினார்…
’’மலேசிய நகரம் … மக்கள் தொகையில் குறைவான எண்ணிக்கை உள்ள நகரம்… இங்கு தமிழர்கள் அதிக எண்ணிக்கையில் வசிக்கிறார்கள்.. மலேசிய நகரைப் பொருத்தவரை IT துறையில் வேலை வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது.. இங்கு IT துறையில் பணிக்கு வருபவர்கள் குடியுரிமை பெற்று நிரந்தரமாக தங்கி விடுகின்றனர். விவசாயத்தைப் பொறுத்தவரை இங்கு கோவா நன்கு விவசாயம் செய்யப்படுவதால் சாக்லேட்டுகள் சல்லிசாக கிடைக்கின்றன.. என்று ஆங்கில மொழியில் உரையாற்றிக் கொண்டிருந்தார்..
நாங்கள் என்ன செய்ய வேண்டும்… என்ன செய்யக் கூடாது என்ற அனைத்தையும் விளக்கினார்… அடுத்ததாக புத்ரஜெயா செல்ல இருப்பதாகவும் அதற்கு முன் மதிய உணவை முடித்துக் கொண்டு சென்று விடலாம் என்று கூறினார்…
சைபர்ஜெயா என்ற பகுதியில் பேருந்து நின்றது..
ஜெய்பூர் மகாலில் மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது..
உணவகத்தில் பஃபே சிஸ்டம். ஆனால் உணவுகளை வீணாக்குபவர்களுக்கு அபராதம். எனவே உணவுகளை தேவைக்கு ஏற்றபடி எடுத்துக் கொண்டனர்.
தரமான உணவு உண்டு முடித்து அனைவரும் புத்ரஜெயாவை நோக்கி பயணிக்கத் தொடங்கினோம்…
உள்ளூர் கெய்டு மீண்டும் பேசத் தொடங்கினார்… புத்ரஜெயா அதிகமான அரசு கட்டிடங்கள் அடங்கிய பகுதி…
இங்குதான் பிரதமர் அலுவலகம் இருக்கிறது.. இங்கு நீங்கள் புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம்..
புத்ர என்றால் பிரின்ஸ் என்று பொருள்.. ஜெயா என்றால் சக்ஸஸ் என்று பொருள் என்று கூறிமுடித்தார்…
பேருந்து புத்ர ஜெயாவை நோக்கி பயணித்தது…
பேருந்தின் ஜன்னல் வழியாக மலேசிய நகரத்தின் அழகை ரசித்து வந்தேன்… சாலைகள் அனைத்தும் சுத்தமாக இருந்தது.. போக்குவரத்து நெரிசல் அதிகம் இல்லை.. அங்கு சாலை விதிகளை முறையாக கடைபிடிக்கிறார்கள்.. இன்னும் விரிவாக சொல்ல வேண்டுமென்றால் இங்குள்ள மக்கள் அதிகமாக உழைக்கிறார்கள்… உழைப்புக்கேற்ற ஊதியங்கள் வழங்கப்படுகின்றன..
குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் சென்னையின் ஒரு பாதி மக்கள் தொகையைக் கொண்ட மலேசிய நகரம் நவநாகரீக வளர்சியைப் பெற்று விளங்குகிறது…
ஆனால் தமிழ்நாடு ஏன் இன்னும் அப்படியே இருக்கிறது என்ற கேள்வி மட்டும் மனதை குடையாமலில்லை…
புத்ரஜெயாவில் இறங்கியதும் புகைப்படம் எடுக்க ஆர்வமாக இறங்கினார்கள்…
விதவிதமான புகைப்படங்களை எடுத்து மகிழ்ந்தனர்..
பின்னர், அங்கிருந்து எங்களுக்காக முன்பதிவு செய்யப்பட்டிருந்த Regal Park ஹோட்டலில் எங்களுக்கு ஒதுக்கப்பட்ட அறைகளில் நுழைந்தோம்…
கொஞ்சம் Refresh செய்து கொண்டு, அடுத்ததாக இரவு உணவுக்கு ஆயத்தமானோம்..
மீண்டும் பேருந்து பயணம் ஆரம்பமானது..
இரவு உணவை முடித்துக் கொண்டு மீண்டும் ஹோட்டலை நோக்கிப் பயணம்…
கேளிக்கை விடுதிகளில் பொழுது போக்கியபடி இங்குள்ள மக்கள் நன்றான வாழ்கையை அனுபவிக்கிறார்கள்…
கலர்கலரான வண்ண விளக்குகளால் எல்லா கட்டிடங்களும் காட்சியளிக்கின்றன.. விதவிதமான மனிதர்கள்… வித்தியாசமான தோற்றங்கள்.. பரவசமூட்டும் பல்சுவை அங்காடிகள் என கோலாலம்பூர் சிட்டியில் எங்களின் முதல்நாள் இரவு தொடங்கியிருக்கிறது…
கொஞ்சம் தூங்கி எழுந்து விட்டு மறுபடியும் வருகிறேன்….
– தொடரும் –
– ர-ஆனந்தன்-